30% பள்ளி கட்டணம் குறைப்பால் தனியார் பள்ளிகளுக்கு ரூ.2525 கோடி இழப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 28, 2021

Comments:0

30% பள்ளி கட்டணம் குறைப்பால் தனியார் பள்ளிகளுக்கு ரூ.2525 கோடி இழப்பு

நடப்பு கல்வியாண்டில் 30 சதவீதம் கல்வி கட்டணத்தை குறைத்து அரசாங்கம் எடுத்துள்ள முடிவினால் தனியார் பள்ளிகள் ரூ.2525 கோடி இழப்பை சந்திக்க நேரிடுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. பள்ளி நிர்வாகம் மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்தியது. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தை முழுமையாக செலுத்த வலியுறுத்தியுள்ளது. கொரோனா எதிரொலியால் பலர் வேலையை இழந்து தவித்த நிலையில் பள்ளி நிர்வாகம் இதுபோன்று அறிவித்தது ெபற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் 2-ம் கட்ட பயிற்சி இதையடுத்து பெற்றோர்கள் போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் முறையிட்டனர். இவர்களின் கோரிக்கையை ஏற்ற கர்நாடக அரசு, இந்த ஆண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் பயிலவில்லை. எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் டியூசன் கட்டணத்தில் 70 சதவீதம் மட்டுமே பெறவேண்டும். 30 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான முழு தொகையையும் ஏற்கனவே பெற்றோர்கள் செலுத்தியிருப்பின் 30 சதவீதம் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சட்டப்பேரவை தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் 2-ம் கட்ட பயிற்சி அரசின் இந்த உத்தரவால் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும், பள்ளிகளை நிர்வகிக்க முடியாமலும் திணறுவதாக தெரிவித்தனர். இதையடுத்து வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர், மாபெரும் ஊர்வலம் மற்றும் பேராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த கல்வி கட்டணம் குறைப்பின் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு சுமார் ரூ.2525 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து கர்நாடகா தொடக்க மற்றும் இடை நிலைப் பள்ளிகளின் கூட்டமைப்பு நடத்திய கணக்கெடுப்பில், முந்தைய ஆண்டில் வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில் 30 சதவீதம் குறைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் இதன் எதிரொலியாக பள்ளி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பள்ளி நிர்வாகம் பெரிய அளவில் நிதி நெருக்கடியில் உள்ளது. சுமார் ரூ.2525 கோடி இழப்பை சந்திக்க நேரிடுகிறது. மேலும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. கடனை திரும்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் 2-ம் கட்ட பயிற்சி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews