பியூசி இரண்டாம் ஆண்டு தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பியூசி இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுக்கான அட்டவணை வெளியிட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் விருப்பங்களை தெரிவிக்கும் படி கூறியது. நாளையே இதற்கு கடைசி நாளாகும். இந்நிலையில் ஜேஇஇ தேர்வு தேதிகள் இடையில் வருவதால் மாணவர்கள் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தேர்வு தேதியில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
ஆனால் பாடங்களை வேண்டுமெனில் மாற்றி அமைக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ``மாணவர்கள் ஜேஇஇ தேர்வு மே 24-ம் தேதிக்கும் 28--ம் தேதிக்கும் இடையில் நடைபெற உள்ளதாக கூறி தேர்வை ஒத்திவைக்கும்படி தெரிவித்தனர். ஆனால் ஜேஇஇ தேர்வு எழுத ஆண்டுக்கு 4 முறை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ஜூலையிலும் தேர்வை எழுதலாம். தொடர்ந்து அடுத்தடுத்து பல போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளதால் தேர்வை ஒத்தி வைக்க முடியாது. ஆனால் பாடங்களில் மட்டும் மாற்றம் செய்யலாம்’’ என தெரிவித்தனர்.
Friday, February 05, 2021
பியூசி 2ம் ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம் இல்லை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
GOVT
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.