Breaking

Friday, February 05, 2021

முதலமைச்சர் கணினி தமிழ் விருது: பிப்ரவரி 26 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக விருது வழங்கப்படுகிறது.
தற்பொழுது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் மேலும் 26.2.2021 வரை நீட்டிக்கப்படுகிறது. போட்டிக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருட்கள் 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் வரும் 26ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், 044 - 28190412 / 044 - 28190413 தொலைபேசி வாயிலாகவும் tvt.budget@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog