தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6.
ந.க.எண்.756 /91/2021 நாள். .02.2021
பொருள்
தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் - 01.01.2021 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் - தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து.
பார்வை
1. தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகள்.- 2020
2. தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ல் பிரிவு. 7,40,41,66
3. அரசாணை எண்.368 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை நாள்.18.10.1993.
4. அரசாணை (நிலை) எண்.101, பள்ளிக் கல்வித் (ப.க.4(1) துறை, நாள்.18.05.2018.
5. அரசாணை (நிலை) எண்.108, பள்ளிக் கல்வித் (ப.க.4(1))துறை, நாள்.28.05.2018.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை (Panel List) 01.01.2021 அன்றைய நிலவரப்படி பார்வையில் தெரிவித்துள்ள விதிகள், சட்டம், அரசாணை மற்றும் கீழ்க்கண்ட விவரங்களின்படி தயார் செய்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 2) அனைத்து வகை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வட்டாரக் கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்கு ஒரு வட்டாரக் கல்வி அலுவலர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்டத் தலைமை இடத்தில் முகாம் அமைத்து சரிபார்த்து மாவட்டக் கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும். ஒப்பளிக்கப்பட்ட தேர்ந்தோர் பட்டியலை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும். வேறு ஒரு நகலில் பட்டியலில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெற வேண்டும். 3) ஆட்சேபணை விண்ணப்பங்கள் ஏதும் பெறப்பட்டால் அதன் மீது வட்டாரக் கல்வி
அலுவலர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு திருத்தம் இருந்தால் தேர்ந்தோர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவிற்குப் பின்னர் பெறப்படும் மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்படக்கூடாது. இறுதி செய்யப்பட்ட தேர்ந்தோர் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலர் ஒப்புதல் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேற்காண் பணிகளை 15 தினங்களுக்குள் முடித்திட வேண்டும். 4) 31.12.2020 க்குள் துறை அனுமதி பெற்று தேர்ச்சி பெற்ற உயர்கல்வி விவரத்தினை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து அதற்கான உரிய பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்திருந்தால் மட்டுமே 01.01.2021 தேதிய தேர்ந்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் அறிவியல் பாடத்திற்கு தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப் பட்டியல் - SGT - PET - SPL TR TO BT ASST (SCIENCE SENIORITY LIST) - 01.01.2021 அன்றைய நிலவரப்படி - PDF
5) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை, அரசுப் பள்ளிகளாக ஏற்றுக்கொண்ட பின்னர் அப்பள்ளிகளின் ஆசிரியர்களை அரசுப் பணிக்கு ஈர்த்துக்கொண்டு அரசால் ஆணை வெளியிடப்பட்ட பின்னர்தான், அவ்வாசிரியர்களை அவ்வொன்றியத்தில் இளையோராக வைத்துத் தேர்ந்தோர் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் துறை அனுமதி பெற்று உயர்கல்வி பயின்றிருந்தால் அதனைத் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் உரிய முன்னுரிமையின்படி சேர்க்க வேண்டும். 6) தொடக்கக் கல்வித்துறையில் பயிற்றுவிக்கும் பாடங்களைப் பயின்று பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பெயர்களை மட்டுமே பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
7) பதவி உயர்வு துறப்பு செய்த ஆசிரியர்களின் பெயர் உரிய விதிகளின்படி தேர்ந்தோர் பட்டியலில் இடம் பெற வேண்டும். குறிப்பில் துறப்பு செய்த நாள் மாதம், ஆண்டு மற்றும் ஆணை எண் குறிப்பிட வேண்டும்.
8) ஒன்றிய அளவில் ஆசிரியர்களிடம் பெறப்படும் குறைகள் சார்ந்த விண்ணப்பங்கள் தீர்வு காணப்பட்டு ஆசிரியர்களுக்கு சார்ந்த தலைமை ஆசிரியர் மூலம் ஆணை அனுப்பிய விவரங்கள் ஒரு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
09) தமிழ்நாடு குடிமுறைப்பணி (ஒழுங்குமுறையும், மேல்முறையீடும்) விதிகளில் விதி 17(பி)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முந்துரிமைப்பட்டியலில் சேர்க்கக்கூடாது. 10) தமிழ்நாடு குடிமுறைப்பணி (ஒழுங்குமுறையும், மேல்முறையீடும்) விதிகளில் விதி 17(எ)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முந்துரிமைப்பட்டியலில் சேர்க்கலாம்.
11) ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் (Censure) தண்டனை பெற்றிருந்தால் ஓராண்டு காலத்திற்கு முந்துரிமைப் பட்டியலில் சேர்க்கக்கூடாது.

12) ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் தண்டனை தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கக்கூடாது.
13) Crucial date அன்று சிறப்பு விதிகளில் சொல்லப்பட்ட தகுதிகள் இருத்தல் வேண்டும். தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் பதவி உயர்வு வழங்கப்படும் நாளுக்குள் 17(பி)-ன்கீழ் குற்றச்சாட்டு உருவாக்கப்பட்டால் பதவி உயர்வு வழங்கக்கூடாது. 14) பார்வையில் தெரிவித்துள்ள தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணிகள் சிறப்பு விதிகள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம்-2016-ல் பிரிவு, 7,40,41,66, அரசாணை 368 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை நாள்.18.10.1993 மற்றும் நடைமுறைகளிலுள்ள விதிகள், சட்டம், அரசாணைகளின்படியும் பட்டியல் தயார் செய்திட வேண்டும் எனவும், மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி எவ்விதமான தவறுக்கும் விதிமீறலுக்கும் இடமளிக்காத வகையில் 01.01.2021 அன்றைய நிலையில் பதவி உயர்வுக்குத் தகுதியான ஆசிரியர்கள் (பதவி வாரியாக) தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இது சார்ந்து உரிய வழிமுறைகளை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவித்து வழிநடத்தவும் தெரிவிக்கப்படுகிறது.

15) அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யும் போது, பதவி உயர்வுக்குத் தேவையான உரிய கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவிற்குள் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 16) 01.01.2021- நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியல், தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்ந்து நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் தொடர்ந்திருந்தால் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் இடைக்காலத் தீர்ப்பாணை மற்றும் இறுதித் தீர்ப்பாணைக்குட்பட்டு செயல்படவேண்டும்.

மேலும், முந்துரிமைப்பட்டியல்களில் திருத்தங்கள் செய்தல், விதிகளுக்கு முரணாக பெயரைச் சேர்த்தல் போன்ற செயல்கள் வருங்காலங்களில் கண்டறியப்பட்டால், சார்ந்த அரசுப்பணியாளர் / அரசு அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொண்டு உரிய முந்துரிமை / தேர்ந்தோர் பட்டியல்களை தயார் செய்து ஒப்புதல் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கவும் இச்செயல்முறைகள் பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புகை வழங்கிடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக் கல்வி இயக்குநர்
பெறுநர்
1. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
நகல் - அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.