கொரோனா தொற்றுக்கு பின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. அதனை தொடர்ந்து வரும் 8ம் தேதி 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் சில பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அதில், ‘ சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்துவதில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளில் தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். அதனை கண்டிப்பாக கடைபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Friday, February 05, 2021
தனியார் பள்ளிகளுக்கு CEO எச்சரிக்கை!
SCHOOLS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.