திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் தொழில் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி மாதம் 29-ஆம் தேதி நடைபெற உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறைந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சரமாரியாக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக பலர் வேலை இழந்த காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வேலையின்மை சதவிகிதம் முன்பை விட குறைந்துள்ளது. பல தனியார் நிறுவனங்கள் முன்வந்து பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற ஜனவரி மாதம் 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதற்கு விருப்பமுள்ள வேலையில்லா பட்டதாரிகள் தங்களது சுயவிவரங்கள் அடங்கிய சான்றிதழுடன் அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் அதனின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Thursday, January 21, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.