அண்ணா பல்கலை நுழைவு தேர்வு இன்று முதல் பதிவு செய்யலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 19, 2021

Comments:0

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு இன்று முதல் பதிவு செய்யலாம்

Capture
அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கிறது. மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர் இன்று (ஜனவரி 19) முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கான இறுதி நாள் பிப்ரவரி 12ம் தேதி. மாணவர்கள் http://tancet.annauniv.edu/tancet என்ற இணைய தளத்தில் வழியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் 044-22358289 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews