பள்ளியில் மாஸ்க், சானிடைசர் உள்பட வழிகாட்டு நெறிமுறை பின்பற்ற வேண்டும்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 19, 2021

Comments:0

பள்ளியில் மாஸ்க், சானிடைசர் உள்பட வழிகாட்டு நெறிமுறை பின்பற்ற வேண்டும்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

The-school-should-follow-the-guideline-including-mask-and-sanitizer-Health-Department-instruction
பள்ளிகளில் மாணவர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். அனைத்து வகுப்பு அறைகளிலும் கிருமி நாசினி இருக்க வேண்டும். அனைத்து வட்டங்களிலும் நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த குழுவின் தகவல் அனைத்து பள்ளிகளுக்கும் அளிக்க வேண்டும். அவசர தேவை என்றால் உடனடியாக பணியாற்றும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். CLICK HERE TO READ OFFICIAL NEWS அவசர காலத்தை எதிர் கொள்ளும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கொரோனோ அறிகுறிகள் கண்டறியப்படும் மாணவர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஜிங்க், விட்டமின் மாத்திரைகள் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்க வேண்டும். பள்ளிகளை சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் கை கழுவுவதற்கு போதிய வசதிகளை மற்றும் உட் கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வாரத்துக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை பள்ளிகளுக்கு வரும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை கொரோனா அறிகுறி சோதனை செய்ய வேண்டும். குறிப்பாக இணை நோய்கள் உள்ள குழந்தைகளை கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும். CLICK HERE TO READ OFFICIAL NEWS

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84613106