Breaking

Tuesday, January 12, 2021

WhatsApp பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவங்களுக்கு பகிரப்படுமா? WhatsApp நிறுவனம் விளக்கம்

வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவங்களுக்கு பகிரப்படமாட்டாது என வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தனிநபர் தகவல்கல் முகநூல் நிறுவனத்துக்கு தரப்பட மாட்டாது என்று வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தகவல்கள் எதுவும் பேஸ்புக்குடன் பகிரப்படாது என புதிய விதிமுறைகள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தங்களது தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப் சேமிக்கிறது என்ற அச்சத்திலும் புதிய விதிமுறைகளாலும் பலர் மாற்று செயலியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த நடவடிக்கை பயனரின் தனிப்பட்ட நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் தனியுரிமையை பாதிக்காது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளது. வாட்ஸ்ஆப், டெலிகிராம், பேஸ்புக்கில் கண்காணிக்கப்படும் தகவல்கள் என்னென்ன?

► வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் அழைப்புகள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படாது.

► உங்கள் தொடர்புகளிலிருந்து வரும் அழைப்புகள், செய்திகள் கண்காணிக்கப்படாது.

► உங்களுடைய இருப்பிடம் குறித்த தகவல்கள், உங்கள் தொடர்புகள் உள்ளிட்டவை பேஸ்புக்குடன் பகிரப்படாது.

► வாட்ஸ்ஆப் குழுக்கள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.

► உங்கள் தரவுகளை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

► குறுஞ்செய்திகளை அனுப்பியவுடன் மறைய வைக்கும் வசதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் புதிய விதிமுறைகளினால் பலர் 'சிக்னல்' உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றி வரும் சூழ்நிலையில் பயனர்களுக்காக வாட்ஸ்ஆப் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog