Breaking

Tuesday, January 12, 2021

பள்ளி மாணவர்களுக்கு வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8ஆம் தேதி வரை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க தங்கள் இசை வினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளது கருத்தில் கொண்டு கல்வி பயில்வதில் மாணவர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும் 19 -1 -2021-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும் அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.மேலும் அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிக் இளம் செயல்பட அனுமதிக்க படுகின்றன. இதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog