செல்போன் பேசும்போது நாம் செய்யும் தவறுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 12, 2021

Comments:0

செல்போன் பேசும்போது நாம் செய்யும் தவறுகள்

ஒரு எண்ணிற்கு கைபேசியில் அழைப்பு விட்டு எதிர் முனைக்கு ரிங் போகிறதா? என்று காதில் வைத்துக் கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. அந்த வேளை யில்தான் கதிர்வீச்சு மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாக பாதிக்கும். எனவே, எண்ணுக்கு அழைப்பு விடுத்தும் கைபேசியை முகத்து க்குச் சற்றே தள்ளிப் பிடித்து இணைப்பு கிடைத்துவிட்டதை அறிந்ததும் காதில் வைத்துப் பேசுவது நல்லது
வீட்டிலும் அலுவலகத்திலும் கை பேசியை உங்கள் சட்டைப்பையிலோ, கையிலோ சுமந்து கொண்டிராமல், நான்கடி தள்ளி கண்ணில் படும்படி எங்காவது வையுங்கள். பேசும்போது மட்டும் எடுத்துப் பேசுங்கள். இதனால் அதன் கதிர்வீச்சி லிருந்து தப்பலாம். தூங்கச் செல்லும்போது முக்கிய அழைப்பு வரும் என்று எதிர் பார்த்து தலைக்கு அருகிலேயே கைபேசியை வைத்துக் கொண்டு தூங்குவது மிகத் தவறு அது மூளையைத் தாக்கி, நிம்மதியான உறக்கத்தைத் தடுக்கும். ஆறு மணி நேர நி ம் ம தி ய ா ள ஒய் ைவ உடலுக் கு ம் மூளைக்கும் தர வேண்டுமானால் இதைத் தவிர்த்து விடவும். இதய அறுவை சிகிச்சை செய்து இதயத்துடிப்பு கருவி (பேஸ்மேக்கர்) பொருத்தியிருப்பவர்கள் அதிக நேரம் செல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். செல் போனின் அலைவீச்சு, இந்தக் கருவியின் இயக்கத்துக்கு மிகுந்த இடையூறு செய்யும் பெருமழை பெய்யும் போதும், இடி தாக்கும் போதும், மின்னல் வெட்டும் போதும் செல்போனில் பேசுவதைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது. அந்த வேளைகளில் அலை பேசி ஒரு இடிதாங்கி போலச் செயல்பட்டு இடி, மின்னல் உங்களை நோக்கி ஈர்த்து விடும் அபாயம் உண்டு என்பதை மனதில் வையுங்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews