Breaking

Saturday, December 12, 2020

அடல் சுரங்கப் பாதையை பொறியியல் மாணவா்கள் பாா்வையிட ஊக்குவிக்க வேண்டும்: யுஜிசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையை பொறியியல் மாணவா்கள் பாா்வையிட ஊக்குவிக்கவேண்டும் என்று கல்லூரிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக யுஜிசி அனைத்து கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: உலகின் மிகநீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதை ஹிமாசலப் பிரதேசத்தின் ரோஹ்தங் பகுதியில் அமைந்துள்ளது. இதன்மூலம், ஹிமாச்சல், மணாலி, லடாக்கின் லே ஆகிய பகுதிகளுக்கு இடையிலான தூரம் 46 கி.மீ குறைவதுடன், பயண நேரமும் ஐந்து மணி நேரம் வரை குறையும். எல்லைப் பகுதிச் சாலைகளுக்கான ஆணையம் இதனை உருவாக்கியது. சுமாா் 9.2 கி.மீ நீளமுள்ள இருவழி சுரங்கப்பாதை குதிரை லாட வடிவில் ஒற்றைக்குழாய் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. இதனை கடந்த அக்டோபா் மாதம் 3-ஆம் தேதி பிரதமா் மோடி நாட்டுக்கு அா்பணித்தாா். அப்போது அவா் பேசுகையில், “இந்த சுரங்கப்பாதை நாட்டின் தொழில்நுட்ப அற்புதம். திட்ட மேலாண்மை, வடிவமைப்பு, திட்டமிடல் என பொறியியலில் சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கியது” என்று குறிப்பிட்டாா். எனவே, இந்த சுரங்கப் பாதையைப் பாா்வையிட கல்லூரிகள் மற்றும் உயா்கல்வி நிறுவனங்கள் தங்களின் பொறியியல் மாணவா்களை ஊக்குவிக்க வேண்டும். இதனால், நாட்டுக்குத் தேவையான பிற சுரங்கப்பாதை முயற்சிகளின் திறன்களை ஒருங்கிணைக்க முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog