சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வரும் 13-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன.
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் 20 தனியாா் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தோ்வு மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இந்தப் படிப்புகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் இணையதளத்தில் வரும் 13-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தையும், தகவல் தொகுப்பையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் வரும் 31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா், அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.