Breaking

Thursday, December 10, 2020

ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் வாங்க கல்லூரி மறுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கு கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வாங்க மறுத்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புழல் கங்காதரன் 8வது தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சீனிவாசன்(19). வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு கணிதம் படித்து வருகிறார். இவர் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைன் தேர்வு கட்டணம் செலுத்துவதற்காக கல்லூரிக்கு சென்று அங்கிருந்த அலுவலகத்திற்கு பணத்துடன் சென்றார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், “7ம் தேதியுடன் பணம் கட்ட வேண்டிய தேதி முடிந்துவிட்டது. இன்றைக்கு பணம் கட்ட முடியாது” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவன் பலமுறை ஊழியர்களை கேட்டும் ஊழியர்கள் பணம் வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் அங்கிருந்த பிளேடை எடுத்து தனது இடது கையில் சரமாரியாக வெட்டி கொண்டார். இதில் அவரது கையில் ரத்தம் பீறிட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இதுகுறித்து தகவலறிந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தி வருகின்றனர். கல்லூரி திறந்து சில நாட்களில் மாணவன் தற்கொலைக்கு முயன்றதுபரபரப்பை ஏற்படுத்தியது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog