Breaking

Saturday, December 26, 2020

10,000 காலிப் பணியிடங்களுக்கு ஜன.7-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10,000 காலிப் பணியிடங்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறுமென அமைச்சர் இரா.காமராஜ், நன்னிலம் அருகே செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட சொரக்குடியில் உள்ளக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தை வெள்ளிக்கிழமைப் பார்வையிட்டப் பின்னர், தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களை, தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் சார்பில், 10,000 காலிப் பணியிடங்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சொரக்குடிப் பாலிடெக்னிக் கல்லூரியில், ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் திறன் பயிற்சி நிறுவனங்களில் கலந்துகொண்டு, இலவசத் திறன் பயிற்சிக்கு ஆட்களையும் தேர்வு செய்ய உள்ளனர். வேலை வாய்ப்பு முகாமில் உயர்கல்வி, சுய வேலைவாய்ப்பு, மற்றும் வங்கிக் கடன் குறித்தத் துறைகளின் அரங்குகள் அமைத்து, இளைஞர்களுக்கு வழிகாட்ட உள்ளனர். எனவே இந்த வேலைவாய்ப்பு முகாமில், எட்டாம் வகுப்புக்கு மேல் படித்த, 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். இந்த முகாமில் வேலை வாய்ப்பினைப் பெற தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு, தமிழக அமைச்சர்கள் ஐந்து பேர் கலந்துகொண்டு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை வழங்க உள்ளனர் எனவும் தெரிவித்தார். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட வேண்டும். அமைச்சரின் ஆய்வின்போது, முன்னாள் எம்பி டாக்டர் கே.கோபால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் இராம.குணசேகரன், நன்னிலம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.சம்பத், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே. ராஜேந்திரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog