வாரத்தில் ஒரு நாள் புத்தகம் சுமக்காத நாள் ஆகுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 30, 2020

Comments:0

வாரத்தில் ஒரு நாள் புத்தகம் சுமக்காத நாள் ஆகுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து அறிக்கை வெளியிட்டு, ஆட்சிக்கு வந்ததும், அவை எப்போதுமே, 'புஸ்வாணம்' ஆகி நாம் பார்த்திருக்கிறோம். மக்கள் தேவையை மனதில் வைத்து அவை தயாரிக்கப்படுகிறதா அல்லது அரசியல்வாதிகளின் 'தேவை'களை வைத்துத் தயாரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம், எல்லார் மனதிலும் எப்போதுமே எழும்; அவ்வளவு 'தரமான' நிர்வாகத்தை, திராவிட கட்சிகள் தந்து வந்திருக்கின்றன. எனவே, மக்களின் தேவையை அவர்களிடமே கேட்போமே என நினைத்து, நம் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்குள், ஆயிரக்கணக்கான தேர்தல் அறிக்கைகளை எழுதி, வாசகர்கள் குவித்து விட்டனர். பல கடிதங்கள், ஒத்த கருத்துடையவையாக இருந்ததால், அது போன்ற கடிதங்கள் தவிர, மற்ற அனைத்தும் இங்கே வெளியிடப்படுகின்றன. இ - மெயில், நேரடி கடிதம், டெலிகிராம் மூலம் குவிக்கப்பட்ட அறிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளன. - ஆசிரியர். சத்தான காய்கறி வேண்டும் விவசாயிகளின் வாழ்க்கை வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவும், ரசாயன உரத்தை அடியோடு ரத்து செய்து, இயற்கை உரத்தை பயன்படுத்தி, காய்கறிகளின் வளர்ச்சியை பெருக்கி சத்தான காய்கறிகள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு ஆராய்ந்து சிறப்பான திட்டத்தை கொண்டு வர திட்டம் தீட்ட வேண்டும். - ப.நாகராஜ், கிணத்துக்கடவு, கோவை. வறுமை நீக்கணும் அனைத்து ஜாதியினருக்கும், உயர் ஜாதியாக இருந்தாலும், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். - பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர், சென்னை.க்ஷ மதிப்பு குடுங்க பாஸ்! காவல் நிலையம் வரும் மக்களுக்கு, உரிய மதிப்பு அளிக்க வேண்டும். -ச.புகழேந்தி, மதுரை. விளையாட்டுக்கு முன்னுரிமை பள்ளிக் கூடங்களில் கல்வி, விளையாட்டு இரு கண்களாக வேண்டும். நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை. ஆர்கானிக் பொருள் கிடைக்குமா? ஆர்கானிக் பொருட்கள் விற்பனை / பயன்பாட்டிற்கு ஊக்கமளிக்க வேண்டும். சூரிய ஒளி மின்சாரம் அவசியம். - அ.அங்கண்ணன், கொளத்துார், சென்னை. தணிக்கை தேவை நாடகம் மற்றும் சினிமாக்களுக்கு கண்டிப்பாக தணிக்கை தேவை. எதிர்க்கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும், ஆட்சியாளர்களுக்கு நல்ல யோசனைகளை கூற வேண்டும். ஆர்.முரளி கிருஷ்ணன், அண்ணா நகர், சென்னை. மின் பழுதை நீக்குங்களேன்! அழகிய சென்னை நகரின் மீது மின் அழுத்த ஒயர் அழகை மட்டும் கெடுக்கவில்லை. பலரது உயிரை பலி வாங்கி விட்டது. முதலில் இதை நீக்கினால், பொது மக்கள் நிம்மதியடைவர். வி.ஆதிகேசவன், சென்னை. தகுதிக்கான வேலை வேணும் தகுதியுள்ள நபர்களுக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் வேலை ஏதும் கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பது மிகவும் வேதனை மிகுந்ததாக இருக்கிறது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே! - எஸ்.ஏ.ஜெயவீரன், கோவை. நினைவுச் சின்னம் எதற்கு? அரசு அதிகாரிகள் எவருக்கும் பணி நீட்டிப்பை வழங்காதீர்கள். திறமையுள்ள பல அதிகாரிகள் உள்ளனர். மறைந்த அரசியல்வாதிகளுக்கு, சமாதிகள் கட்டுவதோ, நினைவுச்சின்னம் அமைப்பதோ கூடாது. எஸ்.கனகசபாபதி,காஞ்சிபுரம். மெக்காலேயை நீக்குங்கள்! கல்வி பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும். ஆங்கில மெக்காலே கல்வித் திட்டத்தை மாற்றி, தமிழ் கலாசாரம், இந்திய கலாசாரம் பற்றி கற்றுத்தர வேண்டும். தொழில் கல்வியை, 8ம் வகுப்பிலிருந்தே நடத்த வேண்டும். ஏ.எஸ்.ரத்தினசாமி, ஜோதிபுரம், கோவை. மக்கள் மனம் மாறுமா? கட்சிக்காரர்கள் கொடுக்கும் பணத்தை உவகையோடு வாங்கும் மக்கள் மனம் மாறுமா? தீர்க்க சிந்தனையோடு ஓட்டளிக்க வேண்டும். பூதங்குடி பழனிவேல், பூதங்குடி, சிதம்பரம். கழிப்பறை அவசியம்! துாய்மை பாரதம் திட்டத்தை மனதில் கொண்டு, அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி உருவாக்கித் தர வேண்டும். எஸ்.கவுரி மீனாட்சி, நாகமலை, மதுரை. சபையை ஒழுங்கா நடத்துங்கப்பா! 'சட்டசபை நடவடிக்கைகளின் போது கூச்சல், குழப்பம், அமளி ஏற்படுத்தாமல் சுமூகமாக நடைபெற உறுதுணையாக இருப்போம். வெளிநடப்பு செய்யாமல் சபையில் மக்கள் நலனுக்கு குரல் கொடுப்போம்' என உறுதி கொடுப்பரா? பி.ஸ்ரீபாதராஜன், சென்னை. அங்கீகாரம் ரத்து செய்யுங்க! போக்குவரத்து உட்பட எல்லா தொழில்களையும் தனியாரே ஏற்று நடத்த வேண்டும். அதன் பிரச்னைகளுக்கு அந்தந்த முதலாளிகள் தீர்த்து வைக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு தலையிடக்கூடாது. ஆனால், பிரச்னை விஸ்வரூபமானால், அங்கீகாரத்தை ரத்து செய்து விட வேண்டும். மகிழ்நன், கடலுார். 'கட்டிங்' இல்லாமல் 'டெண்டர்' நடக்கணும்! ராஜாஜி கூறியது போல், டெண்டர், லைசன்ஸ், பர்மிட், ரிஜிஸ்டர் ஒழிய வேண்டும். டெண்டர் விடாமல் ஆயிரக்கணக்கான இன்ஜினியர், கொத்தனார் மற்றும் தொழிலாளர்களை அரசே நியமிக்க வேண்டும். இதன் மூலம், 'கட்டிங்' கொடுக்காமல், அதை சேமித்து, தரமான கட்டுமான பணிகள் நடைபெறும். - கே.டி.வெங்கடகிருஷ்ணன், மதுரை. புத்தகம் சுமக்காமல்வாரத்தில் ஒரு நாள்! ஒவ்வொரு கட்சியினரும், 'நல்லவர்கள், நாணயம் உள்ளவர்கள், மக்கள் மீது அன்பு செலுத்துபவர்கள் காவல் நிலையத்தில் வழக்கு ஏதும் இல்லாதவர்கள் மட்டுமே வேட்பாளராக நிறுத்துவேன்' என்று கூற வேண்டும். வாரத்தில் ஒருநாள் பள்ளியில் புத்தகம் சுமக்காத நாளாக வைத்து அந்த நாளில் தொழிற்கல்வி கற்றுத்தர வேண்டும். நீதி போதனையையும் சொல்லித்தர வேண்டும். அரசு துறையில் பணிபுரியும் அத்தனை ஊழியர்களின் குழந்தைகளையும் அரசு பள்ளியிலேயே படிக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூற வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் கட்டணம் பெற்று, டியூஷன் நடத்த தடை விதிப்பேன் என்றும் கூற வேண்டும். கோ.மங்கையர்க்கரசி, மணவாளநல்லுார், கடலுார். வேலை செய்யாதஎம்.எல்.ஏ.,வுக்கு 'ஆப்பு' அடிங்க! தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியாக போட்டியிட வேண்டும். மேலும், ஒரு தொகுதியில் வெற்றி பெரும் சட்டசபை உறுப்பினர், இரண்டு ஆண்டுகளில் தொகுதிக்கு தேவைப்படும் தேவைகளை தொகுதி மக்களுக்கு செய்யவில்லை எனில், மீண்டும் தொகுதியில் ஒரு நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை நடத்தி, பதவி இழப்பு செய்ய தொகுதி மக்களுக்கு உரிமை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். பி.அய்யணன், திருமால்புரம், மதுரை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews