Breaking

Monday, November 23, 2020

மிக மிக அவசரம் - பள்ளிக்கல்வி - வடகிழக்கு பருவமழை - 2020 - 23.11.2020 முதல் 27.11.2020 வரை 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
//மிக மிக அவசரம்//
//தனி கவனம்//
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந. க எண் : 5241 /ஆ5/2020 நாள்:23.11.2020
பொருள்
பள்ளிக்கல்வி - விழுப்புரம் மாவட்டம் - வடகிழக்கு பருவமழை 2020 23.11.2020 முதல் 27.11.2020 வரை 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு
பார்வை
1.சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அறிவிப்பு நாள்: 21.11.2020
விழுப்பூரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுரை நாள: 23.11.2020
2.மைய பார்வையில் காணும் சென்னை வானிலை ஆராய்ச்சி அறிவிப்பின்படி 23.11.2020, 24.11.2020,25.11.2020,26.11.2020 மற்றும் 27.11.2020 ஆகிய 5 நாட்கள் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து, விழுப்புரம் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு தொடக்க/ நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்கண்ட பணிகளை இன்றே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முன்னெச்சரிக்கைப் பணிகள்
1. பேரிடர் காலத்தில், அனைத்து பொதுமக்களின் நலன் கருதி, பொதுமக்களை பாதுகாப்பாக பள்ளியில் தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்து வைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் தங்களை அணுகும் பட்சத்தில் வகுப்பறை சாவிகளை உடன் ஒப்படைக்கப்பட வேண்டும்.
2. பள்ளியிலுள்ள நீர் தேக்க தொட்டிகளில் முழுமையாக நீரினை நிரப்பி வைத்திருத்தல் வேண்டும்.
3. பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்து வைத்திருத்தல் வேண்டும். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளில் மேற்கண்ட பணிகளை முழு கவனத்துடன் கண்காணித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஓம/- க. முனுசாமி
முதன்மைக் கல்வி அலவலா
விழுப்புரம்
பெறுநர்:
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் - விழுப்புரம் மாவட்டம், (திருகொவிலூர் - முகையூர் & திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்காக)
2. அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் - விழுப்புரம் மாவட்டம்.
3. அனைத்து அரசு தொடக்க /நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் - விழுப்புரம் மாவட்டம். (உரிய வட்டாரக் கல்வி அலுவலர் வழியாக)
நகல் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக
பணிந்தனுப்பபடுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog