Breaking

Friday, November 06, 2020

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு : மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதில், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்க்கக் கோரி மனு செய்துள்ளோம். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘முறைப்படி மனுவாக தாக்கல் செய்யப்பட்டால், விசாரணைக்கான பட்டியலிடப்பட்டதும் விசாரிக்கப்படும்’’ என்றனர். இதையடுத்து நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த ப்ரீத்தி ெபயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, இந்தாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதனால், அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் பயன்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஐகோர்ட் கிளையும் முக்கிய காரணம். இந்த உள்இடஒதுக்கீட்டை பெற அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தகுதி உண்டு. தற்போதைய அரசாணைப்படி, அரசின் உள்இடஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பெரும்பாலும் ஏழை மாணவர்கள் படிக்கின்றனர். எனவே, நீதிமன்றம் தலையிட்டு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்த்து புதிதாக அரசாணை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog