Breaking

Tuesday, November 03, 2020

நீட் தோ்வு: மாணவிகளின் ஆபரணங்கள் அகற்றுவதை எதிா்த்த வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தோ்வு எழுத வரும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற நிா்பந்திக்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அரவிந்த் ராஜ் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணிய கூடாது, பா்ஸ் வைத்திருக்கக் கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணிய கூடாது என்பது உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளால், ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனா்.திருமணமான விண்ணப்பதாரா்கள் புனிதமாகக் கருதும் தாலி, மெட்டி, காதணி, மூக்குத்தி போன்றவைகளை அகற்ற நிா்பந்திக்கப்படுகின்றனா். தோ்வு அறைகளில் கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது. இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். ஆபரணங்களை அகற்ற, மாணவிகளை நிா்பந்திக்ககூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, பொது சுகாதார சேவை இயக்குநா், தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தோ்வு முகமை 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog