Breaking

Tuesday, November 03, 2020

பள்ளிகள் திறப்பில் அவசர அறிவிப்பு ஏன்? ஸ்டாலின்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பேரிடர் காலத்தில் பள்ளிகள் திறப்பில் அரசின் அவசர அறிவிப்பு ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? கரோனா குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா?தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பெற்றோர்- ஆசிரியர் - மருத்துவர்களுடன் ஆலோசனைகளைச் செய்தாரா? மாணவர்களின் பாதுகாப்பு, விடுதி - உணவு போன்றவை குறித்த குழப்பங்கள் நிலவுகின்றன. கரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதா?பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 2021-ல் அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog