Breaking

Monday, November 09, 2020

'ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உடல்நிலை பரிசோதனை கட்டாயம்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பள்ளிகள் திறக்கப்படுவதால் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் நிலையை வாரத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும்' என பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளார். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிக்கை: கொரோனா குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பொருட்களை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். அனைத்து வகுப்பறையிலும் 'சானிடைசர்' இருக்க வேண்டும்.அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலையை வாரத்திற்கு ஒருமுறை சோதனை செய்ய வேண்டும். இணை நோய்கள் உள்ள மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.ஒவ்வொரு வட்டாரத்திலும் நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த குழுவின் தொடர்பு எண்ணை அனைத்து பள்ளிகளுக்கும் பகிர வேண்டும். இணை இயக்குனர் மாநில அளவில் அனைத்து குழுவுடன் தொடர்பில் இருக்க வேண்டும். கொரோனா அறிகுறி தென்படும் குழந்தைகளுக்கு உடனடியாக சோதனை செய்யும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 'விட்டமின்' மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்துகளை போதிய அளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சுகாதார அதிகாரியை நியமித்து தொடர்ந்து பள்ளியை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடல்நிலை தொடர்பான தகவலை உடனடியாக தயாரித்து அளிக்க வேண்டும்.இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும்.பள்ளிகளில் கை கழுவும் வசதி மற்றும் துாய்மையாக வைத்திருக்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக செய்ய வேண்டும். இதற்கான விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog