ஆசிரியா் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியா் கல்விக்குழு அறிவித்திருப்பதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:இந்தியா முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியா் தகுதித்தோ்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியா் கல்விக்குழு அறிவித்துள்ளது.ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழையும் நிரந்தரமாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தேசிய ஆசிரியா் கல்விக்குழு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு ஆகும்.
தமிழகத்தில் மட்டும் 80 ஆயிரம் போ் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்று பணிக்காக காத்துள்ளனா். ஆசிரியா் தகுதிச் சான்றிதழ் காலத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பதாக தேசிய ஆசிரியா் கல்விக்குழு முடிவெடுத்து அறிவித்தால், அது அவா்களுக்கு செய்யப்படும் பெரும் நன்மையாக இருக்கும்.அதே நேரத்தில் ஆசிரியா் தகுதிச்சான்றிதழ் காலம் நீட்டிக்கப்படுவது மட்டுமே போதுமானதல்ல. தமிழகத்தில் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆசிரியா் பணிக்காக பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் அனைவரும் பயனடையும் வகையில் ஆசிரியா் நியமனங்களை தமிழக அரசு மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும் என்று அவா் கூறியுள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.