கால்நடைத் துறையில் 1,154 மருத்துவர்களை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஹூவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்திலுள்ள மணவாள மாமுனிகள் 650 திருநட்சத்திரத்தை முன்னிட்டு மணவாள மாமுனிகள் சன்னதிக்கும் ஆண்டாள் கோவில் சன்னதிக்கும் சாமி தரிசனம் செய்ய தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் வருகை தந்தனர்.அவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆணையர் தனபால், தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் இரு அமைச்சர்களும் மணவாள மாமுனிகளையும் ஆண்டாளையும் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் பல்வேறு நலத் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த முறையில் அரசு செயலாற்றி வருகிறது.
அவ்வகையில் கால்நடைத்துறையில் 3 மருத்துவக் கல்லூரி, ஒரு ஆராய்ச்சி நிலையம், தெற்காசியாவில் மிகப் பெரிய கால்நடைப் பூங்கா, சேலத்தில் தொடங்குவதற்கு கட்டட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் பெருமைகளை இங்கு சொன்னார்கள் அதனடிப்படையில் தமிழக அரசு பல்வேறு கோவில்களுக்கு பல்வேறு நலப்பணிகளை செய்துள்ளது. தொடர்ந்து இந்த ஆட்சி மீண்டும் அம்மாவின் ஆசியுடனும் மக்களின் ஆதரவுடனும் மறுபடியும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளிடம் அதை வேண்டியிருக்கிறோம்.கால்நடைப் பராமரிப்புத் துறையில் 1154 மருத்துவர்களுக்கான பணியிடங்களை நிரப்ப டிஎன்பிசியில் அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. வேலை வாய்ப்பில் திறந்த மனதொடு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.2021 தேர்தலை பொருத்தவரை தமிழக அரசு 5 ஆண்டுகளில் செய்த பணிகள் மற்றும் சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்களியுங்கள் என்று கூறுவோம்.
ஏழை எளிய கிராமப்புறங்கள், பேரூராட்சிகள் மக்களுக்கு நாட்டுக்கோழிகள், கறவை பசுக்கள், வெள்ளாடுகள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்த போது. விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் மற்றும் கலைத்துறையினருக்கு தொடர்ந்து மிரட்டல் வருவது குறித்த கேள்விக்கு. விஜய்சேதுபதி மட்டுமல்ல சாதாரண மக்களுக்கு பாதிப்பு என்றாலும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். விஜய்சேதுபதி புகார் அளித்துள்ளார். விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு.. நிதி ஆதாரம் இல்லாமல் உள்ளது. நிதியாதாரம் சேர்ந்தபின் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.