ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஏழு ஆண்டு தகுதியை, ஆயுட்காலம் முழுதும் நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் தமிழகத்தில், 1.5 லட்சம் பேர், ஆசிரியர் பணிக்கு தகுதி பெறும் நிலை உள்ளது.மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரிகள், கல்வி தகுதியான பட்டப்படிப்பு முடித்த பின், ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகளில் சேரும் ஆசிரியர்களுக்கு மட்டும், இந்த தகுதி தேவையில்லை என்ற சட்டம் அமலில் உள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
மேலும், 'டெட்' தேர்வு எழுதும் ஆசிரியர்களின் தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது. ஏழு ஆண்டுகளுக்குள் பணியில் சேர்ந்து விட வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.இந்த நடைமுறை, பட்டதாரிகளுக்கு வேலையில்லா பிரச்னையுடன், கூடுதலாக தேர்வு எழுதியபடியே இருக்க வேண்டும் என்ற சுமையையும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
இந்நிலையில், டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கான தேர்ச்சி சான்றிதழின் தகுதி காலத்தை, ஏழு ஆண்டு என்பதில் இருந்து ஆயுள் முழுமைக்கும் நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, என்.சி.டி.இ., சில வாரங்களுக்கு முன் நடத்திய பொது குழுவில், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பொது குழுவில், இதற்கான கருத்துரு தாக்கல் செய்யப்பட்டு, சட்ட ஆலோசனை பெற முடிவு செய்துள்ளதாக, என்.சி.டி.இ., வெளியிட்டுள்ள கூட்ட குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த சலுகை அமலுக்கு வந்தால், தமிழகத்தில் மட்டும், டெட், சிடெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள, 1.5 லட்சம் பேர் வரை, மீண்டும் தேர்வை எழுத வேண்டியதில்லை; எப்போது வேண்டுமானாலும், அரசு பள்ளி பணியில் சேர முடியும்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.