'உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் பட்டப்படிப்பு, இனி இலவசமாக கற்பிக்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.
சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழ்ஆராய்ச்சி நிறுவன பொன் விழா ஆண்டின் துவக்க விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதில், வள்ளலார் ஆய்விருக்கையை துவக்கி வைத்து, அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இதுவரை எண்ணற்ற தமிழாய்வுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது.
அடுத்த மாதத்தில் இருந்து, ஆண்டுதோறும், 50 அரிய நுால்கள் பதிப்பித்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். பொன் விழா ஆண்டு மலரை, முதல்வர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கட்டணத்துடன் கற்பிக்கப்படும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் பட்டப்படிப்பு, இனி இலவசமாக கற்பிக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் விஜயராகவன், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.