'அண்ணா பல்கலை உயர் அந்தஸ்து மூலம் உலகத்தர மாணவர்களை உருவாக்கலாம்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 27, 2020

Comments:0

'அண்ணா பல்கலை உயர் அந்தஸ்து மூலம் உலகத்தர மாணவர்களை உருவாக்கலாம்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''சென்னை அண்ணா பல்கலை, உயர் அந்தஸ்து பெறுவதன் மூலம், உலகத்தர மாணவர்களை உருவாக்க முடியும்,'' என, கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: நாட்டில் சிறந்த, 10 பல்கலைகளை தேர்வு செய்து, முதலாவதாக அண்ணா பல்கலைக்கு உயர் அந்தஸ்து வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது, தமிழகத்திற்கு பெருமை. ஆரம்பத்தில் தமிழக அரசு, இதற்கு ஒப்புதல் அளிக்கும் நிலை இருந்தது. ஆனால், 69 சதவீத இட ஒதுக்கீடு பறிபோகும் என, அரசியல் கட்சிகள் குழப்பி விட்டன. அதற்கு ஏற்ப, மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுதிய துணைவேந்தர் சுரப்பாவிற்கும், தமிழக அரசுக்கும் நடக்கும் சூழலை, எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி விட்டன. உயர் அந்தஸ்து கிடைத்தால், 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகள் அதிகரிக்கும். புதிய படிப்புகள் துவங்கப்படும். வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும். வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம், தமிழக மாணவர்கள் பயன் பெறுவர்.ஒரு நிறுவனம், மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் உள்ளதா என பார்க்கக் கூடாது. தமிழக மாணவர்கள் பயன் பெறுகின்றனரா என்று தான் பார்க்க வேண்டும். இட ஒதுக்கீடு கொள்கை குறித்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கேட்டு பெற, தமிழக அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, உயர் அந்தஸ்தே வேண்டாம் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. 'நீட்' முதல் நுழைவுத்தேர்வு என்றாலே, அரசியல் சார்ந்த எதிர்ப்பு கிளம்பி விடுகிறது. தற்போதைய தேவை, தரமான மாணவரை உருவாக்குவது தான். தமிழகத்திற்குள் ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு, போட்டித் தேர்வு வேண்டாம் என்பது கூடாது. போட்டித் தேர்வுகளை அச்சமின்றி சந்திக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்தும் கல்வித் திட்டங்களை வகுக்க வேண்டும். அப்போது தான், ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் மூலம் திறமை மிக்க மாணவர்களை உருவாக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews