Breaking

Saturday, September 12, 2020

தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கல்வி கட்டணத்தை குறைக்க கோரி வழக்கு: பெற்றோர் மீண்டும் மனு அளிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை உயர் நீதிமன்றத்தில் சேக் தாவூத், ஏசையாகுமார், புகழேந்தி, வேணுகோபால் உட்பட பலர் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிக்கின்றனர். முதல் ஆண்டு ரூ.22.50 லட்சம் செலுத்தினோம். கடந்த 6 மாதமாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது முழு கட்டணத்தையும் செலுத்த கல்லூரி கட்டாயப்படுத்துகிறது. பெற்றோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் இந்த ஆண்டுக்கான முழு கட்டணத்தையும் செலுத்தக் கோருவது ஏற்புடையதல்ல. குறைந்த கட்டணம் வசூலிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர். இவ்வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. பெற்றோர் தரப்பில் கல்வி கட்டணத்தில் 40% விலக்கு அளிக்க மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட கோரப்பட்டது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog