தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்டம்பர்-30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பள்ளி மாணாக்கர்களுக்கான கட்டணத்தில் 40 சதவீத கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30 வரை, உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக முதல் தவணையாக 40 சதவீதத்தைவிட கூடுதல் கட்டணத்தை பள்ளிகள் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார். பள்ளிகள் வெவ்வெறு பெயர்களில் கூடுதல் கல்வி கட்டணத்தை வசூலித்தால் அது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என நீதிபதி எச்சரித்தார்.
கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகளின் பட்டியலையும், அவற்றின் மீதான நடவடிக்கையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வி துறைக்கும் பாராட்டு தெரிவித்தார்.