சூரரைப் போற்று படத்தின் லாபத்தில், 5 கோடி ரூபாய் தருவதாக கூறியிருந்த நடிகர் சூர்யா, அதில், 2.5 கோடி ரூபாயை கல்விக்காக கொடுத்து உதவிஉள்ளார்.நடிகர் சூர்யா
அறிக்கை:கொரோனா தொற்றால், கடுமையாக உழைத்து முன்னேறியவர்கள் கூட, வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும், அடிப்படை தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.ஊக்கத் தொகை'சூரரைப் போற்று' படத்தின் விற்பனை தொகையில் இருந்து, 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
அதில், பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர்.பத்திரிகையாளர்கள், துாய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு, 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளோம்.ஏற்கனவே, 1.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது வினியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள், தியேட்டர் தொழிலாளர்கள் மற்றும் என் நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு, 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.இவர்களின் குடும்பத்தில் பள்ளி மற்றும் கல்லுாரியில் படிப்பவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். 'அகரம்' அறக்கட்டளையின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். துணை நிற்றல்அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்தில் இருந்து, ஒருவருக்கு மட்டும், கல்வி கட்டணமாக அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில், அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
அகரம் அமைப்பின் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் அறக்கட்டளை முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி, உதவித் தொகைக்கான தேர்வு அமையும். விண்ணப்பத்தை, www.agaram.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த தருணத்தில், பொருளாதார நெருக்கடியால், கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups