எஸ்.ஐ., எழுத்து தேர்வு மீண்டும் நடத்தப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 19, 2020

Comments:0

எஸ்.ஐ., எழுத்து தேர்வு மீண்டும் நடத்தப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''வெளிநாட்டுக்காரரை ஏமாத்துன புகார்ல, வில்லங்கம் பண்றாங்க பா...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார், அன்வர்பாய்.''எந்த ஊரு விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''இலங்கையைச் சேர்ந்த ஒருத்தர், லண்டன்ல வசிக்கிறாரு... இவரை திருமணம் பண்ணிக்கிறதா சொல்லி, திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தர், 28 லட்சம் ரூபாயை வாங்கிட்டு, அல்வா குடுத்துட்டாங்க பா...''லண்டன் நபர், தன் நண்பர் மூலமா, உள்ளூர் போலீஸ்ல புகார் குடுத்தார்... பணம் குடுக்கல், வாங்கல் சம்பந்தமான ஆவணங்களை குடுத்தும், திருப்பூர் வடக்கு போலீசார், எந்த நடவடிக்கையும் எடுக்கலை பா...''ரெண்டு தரப்புலயும் சில லட்சங்களை அமுக்கிடணும்னு பிளான் பண்ணி, கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்காங்க... இது எல்லாத்துக்கும், அங்க இருக்கிற உயர் அதிகாரியின் முழு ஆதரவு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.''கணேசன், இந்த பேப்பரை அங்கன வையும்...'' என, நண்பரை ஏவிய அண்ணாச்சியே, ''வேலையும் கிடையாது, சாலையும் கிடையாதுன்னு விரட்டி அடிக்காரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார். ''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''சென்னை, வில்லிவாக்கம் ஒன்றியம், மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் நகர்ல, 3 ஏக்கர் குளத்தை, 100 நாள் வேலை திட்டத்துல, 20.32 லட்சம் ரூபாய் மதிப்புல மேம்படுத்தினதா, 2016 - 17ம் வருஷம், கல்வெட்டு மட்டும் வச்சாவ... ஆனா, குளத்துல ஒரு களையை கூட பிடுங்கலை வே...''இது பத்தி, அப்பவே, 'தினமலர்'ல செய்தி வெளியாகி, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரியும் நேர்ல ஆய்வு செய்தாங்க...''ஆனா, அன்னையில இருந்து, ஊராட்சியில இருக்கிற, 1,000த்துக்கும் மேற்பட்ட ஊரக வேலை திட்டப் பணியாளர்களுக்கு, எந்த வேலையும் தர மாட்டேங்காவ வே... இவங்க தான், முறைகேடுகளை போட்டு குடுத்துட்டாங்கன்னு, அதிகாரிகள் நினைக்காவ...''இது பத்தி, ஊராட்சிச் செயலரிடம் அவங்க கேட்டதுக்கு, '100 நாள் வேலை மட்டுமில்லை... புதிய கன்னியம்மன் நகர்ல, ஒரு வார்டுக்கு இரண்டு சாலை வீதம், ஆறு வார்டுகளுக்கு சாலை அமைக்கும் பணியையும், ஒன்றிய அதிகாரிகள் நிறுத்த சொல்லிட்டாங்க'ன்னு குண்டை துாக்கி போட்டிருக்காரு..''ஊராட்சிச் செயலர், 10 வருஷமா அங்கனயே இருக்கிறதால, ஒன்றிய அதிகாரிகளை பார்க்க விடாம நந்தியா தடுக்கார்னு கிராம மக்கள் குமுறிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''வீரபத்ரன் வரார்... சுக்கு காபி குடும் நாயரே...'' என்ற குப்பண்ணாவே, ''தேர்வு முறைகேடு பத்தி, புகார் தெரிவிச்சும் எதுவும் நடக்கலை ஓய்...'' என்றார்.''எந்தத் தேர்வை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமா, 969 எஸ்.ஐ.,க்களைத் தேர்வு செய்ய, போன ஜனவரி, 12, 13ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தினா... இதை, 1.50 லட்சம் பேர் எழுதினா ஓய்...''இதுல, 1,200க்கும் மேற்பட்டவா, பல முறைகேடுகள் பண்ணி, தேர்ச்சிப் பெற்றிருக்கான்னு, பாதிக்கப்பட்டவா புகார் சொல்றா... இது சம்பந்தமா, ஐகோர்ட்ல வழக்கும் போட்டிருக்கா ஓய்...''போலீஸ் துறைத் தலைவர், முதல்வர்னு பல தரப்புக்கு புகார் அனுப்பியும், புண்ணியம் இல்லை... 'பழைய தேர்வை ரத்து பண்ணி, புதுசா நேர்மையா தேர்வு நடத்தணும்'னு, பாதிக்கப்பட்டவா புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.அரட்டை முடிய, நண்பர்கள் நகர்ந்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews