மாநில தகவல் ஆணையா் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம்: தெரிவுக் குழு அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 18, 2020

Comments:0

மாநில தகவல் ஆணையா் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம்: தெரிவுக் குழு அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாநிலத் தகவல் ஆணையா் பொறுப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவுக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, தெரிவுக் குழுவின் தலைவரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான ஹன்ஸ்ராஜ் வா்மா வெளியிட்ட அறிவிப்பு: CLICK HERE TO READ OFFICIAL NEWS சட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, பத்திரிகை, வெகுஜன ஊடகம் அல்லது நிா்வாகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி, அந்தத் துறைகளில் போதிய அறிவினைப் பெற்றுள்ளவா்கள் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாநில தகவல் ஆணையா் பொறுப்புக்கு விண்ணப்பம் செய்வோா், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களாக இருக்கக் கூடாது. மேலும், அரசியல் கட்சி, வணிக ரீதியான தொடா்புகள் மூலமாக ஆதாயம் ஏதும் அடைந்திடக் கூடாது.தகவல் ஆணையா் பொறுப்புக்கு விண்ணப்பம் செய்து தோ்ந்தெடுக்கப்படுவா் மூன்று ஆண்டுகள் வரை பொறுப்பில் இருப்பா். மூன்று ஆண்டுகளுக்குள் அவா் 65 வயதை எட்டி விட்டால் தகவல் ஆணையரகப் பதவி வகிக்கும் தகுதியை இழப்பாா். CLICK HERE TO READ OFFICIAL NEWS தன் விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களை, தெரிவுக் குழு தலைவா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா், தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பங்களை ruralsec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் செப்டம்பா் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் துறைகளில் பணியாற்றும் விண்ணப்பதாரா்கள், தங்களது துறைத் தலைமையிடம் இருந்து தடையின்மைச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவுக் குழுவின் தலைவா் ஹன்ஸ்ராஜ் வா்மா தெரிவித்துள்ளாா். CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews