மிகவும் அவசரம் /தனிக்கவனம்/இன்றே
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை -6
ந.க.எண்.048951/எம் /84/2019, நாள் 11.07.2020
பொருள்: பள்ளிக்கல்வி - மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் - தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme) 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட இரண்டாம் கட்டமாக பெறப்பட்ட மாணவ / மாணவியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை சரிபார்த்து நடைமுறையில் வைத்தல் - சார்ந்த விவரங்களை 28.07.2020 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பிவைத்தல்-சார்பு. CLICK HERE TO DOWNLOAD PDF 1. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் 01.07.2020 தேதியிட்ட பார்வை : மின்னஞ்சல்.
2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 048951/எம்/இ4/2019, நாள்.06.07.2020. 3. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் 20.07.2020 தேதியிட்ட மின்னஞ்சல்.
பார்வை 1-ல் காணும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் மின்னஞ்சலின்படி கடந்த 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான NMMSS கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவ/மாணவியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை சரிபார்த்து நடைமுறையில் வைக்குமாறு அறிவுறுத்திட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்திட பார்வை 2-ல் கண்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. CLICK HERE TO DOWNLOAD PDF ஏற்கனவே, தங்கள் மாவட்டத்தில் கடந்த 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் தேசிய வருவாய் வழி திறன் தேர்விற்கான (National Means-cum Merit Scholarship Scheme) NMMSS கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் குறிப்பிட்ட சில மாணவ / மாணவியர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகை செலுத்த முடியாதவாறு அவர்தம் வங்கிக்கணக்குகள் செயல்பாட்டில் இல்லையெனவும் அக்கணக்குகளை சரிபார்த்து நடைமுறையில் வைக்குமாறும் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக அம்மாணவ / மாணவிகளை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது. CLICK HERE TO DOWNLOAD PDF இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, பார்வை 3-ல் கண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் மின்னஞ்சல் மூலம் விடுபட்ட மாணவர்களில் அதிகபட்சமாக 2396 மாணவர்களின் பெயர்ப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. அவ்விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இம்மாணவர்கள் சார்பாகவும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கி இணைப்பில் காணும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வங்கிக் கணக்கு உதவித்தொகை செலுத்த தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணி பற்றிய அறிக்கையை 28.07.2020 அன்று மாலை 5 மணிக்குள் இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) அவர்களின் மின்ன ஞ்சல் முகவரிக்கு (idnsed@nic.in) தவறாமல் அனுப்பி வைக்குமாறு மீளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உதவித்தொகை கிடைக்காமல் விடுபட்ட மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு இதுவே என்பதால் இதில் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்பட்டு மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை சரிபார்த்து உதவித்தொகைக்கு தகுதியுடைய அனைத்து மாணவ மாணவிகளும் பயனடைய ஆவன செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD PDF இணைப்பு: அட்டவணை1,2,3 மற்றும் 4.
பெறுநர்:- அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்.
நகல்:- அரசு முதன்மைச் செயலாளர் பள்ளிக்கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை -9
- அவர்களுக்குத் தகவலுக்காகப் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.