Breaking

Wednesday, July 22, 2020

பிளஸ் 2 அரசியல் அறிவியல் பாடத்தில் மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய பாடத் திட்டத்தில், பிளஸ் 2 வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, 'நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிந்தைய அரசியல்' என்ற புத்தகத்தில், 'பிரிவினைவாதமும், அதன் பின்னணியும்' என்ற தலைப்பிலான பத்தி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை நீக்கியது மற்றும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என, யூனியன் பிரதேசங்களாக மாற்றம் செய்யப்பட்டது குறித்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 'பிராந்திய மக்களின் விருப்பம்' என்ற தலைப்பில், இந்த பாடம் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog