பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்: புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பெருமிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 30, 2020

Comments:0

பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்: புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1968-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது. தற்போதைய புதிய கல்விக் கொள்கை 2014 தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவின் முழுமையான அறிக்கையை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக் குழு, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி சமர்ப்பித்தது. புதிய கல்விக் கொள்கைக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020-யை முழுமையாக வரவேற்கிறேன். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கல்வித்துறை சீர்திருத்தம் இது. பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்’’ எனக் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews