Breaking

Friday, July 24, 2020

பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் வெளியிடப்பட்டன. CLICK HERE TO READ OFFICIAL NEWS மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், நாளை முதல் வழங்கப்பட உள்ளது. மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து, பள்ளியின் முத்திரையிட்டு, தலைமை ஆசிரியர்கள் தங்கள் கையெழுத்திட்டு, மாணவர்களுக்கு நாளை முதல் வினியோகம் செய்ய உள்ளனர். இந்நிலையில், மாணவர்களும், தனித்தேர்வர்களும் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் வேண்டுமென விரும்பினால், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்கள் மற்றும் பள்ளிகள் வழியே, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய்; மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு, 305 ரூபாய்; ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் நகல் கேட்பவர்கள், தற்போது மறுகூட்டலுக்கோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.மாணவர்கள் விண்ணப்பித்தவுடன், விண்ணப்ப எண், பதிவு எண், விண்ணப்பித்த பாடங்கள், கட்டணம் ஆகியவை அடங்கிய ஒப்புகை சீட்டை மாணவர்களுக்கு தர வேண்டும். அவற்றை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog