கல்வி தொலைக்காட்சி சேனல்களில் பாடங்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் யார்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 16, 2020

Comments:0

கல்வி தொலைக்காட்சி சேனல்களில் பாடங்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் யார்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பள்ளிக்கல்வி துறை அமைச்சர்செங்கோட்டையன் கூறியதாவது- தமிழகத்தில், 'டிவி' வாயிலாக, பள்ளி மாணவர்களுக்கு, கல்வியை எடுத்துச் செல்லும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்து உள்ளார். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று, தேர்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் தான், 'டிவி' சேனல்களில் பாடம் கற்பிக்க உள்ளனர்.எந்த வகை மாணவர்களும், 'டிவி'யில் கல்வியை கற்கலாம். அப்போது, பெற்றோரும் கண்காணிக்க முடியும். ஒவ்வொரு வகுப்புக்கும், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, பாடங்களை கற்பிக்க வசதியாக, கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் நிலை இல்லை. பிளஸ் 2 மாணவர்கள் அனைவரின் கையிலும், 'லேப்டாப்' உள்ளது. அவர்களின் லேப்டாப்களில், பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்படுகின்றன. மேலும், தமிழகத்தில் மட்டுமே, 'க்யூஆர் கோடு' வாயிலாக, பாடம் கற்கும் முறையை அமல்படுத்தி உள்ளோம். பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews