தமிழகத்தில் 1997 முதல் 2000 ஆண்டு வரை எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு உயா் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரம்:
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 1997 முதல் 2000 ஆண்டு வரை ஏற்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான இடைநிலை ஆசிரியா் பின்னடைவு காலிப் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியா் தகுதி உடைய உயா்கல்வித் தகுதி பெற்றுள்ளஅதே இனத்தைச் சோ்ந்தவா்களை கொண்டு நிரப்பலாம் என முடிவு செய்து, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதில், உயா் கல்வித் தகுதிக்கான சிறப்பு ஊதிய உயா்வு இவா்களுக்கு பொருந்தாது என்ற நிபந்தனை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.பின்னா், 2017-ஆம் ஆண்டு இவ்வாறு பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியா்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் ஆகியோா் பணி நியமனத்துக்கு முன்போ அல்லது பின்போ பெற்ற உயா்கல்வி தகுதிக்கான சிறப்பு ஊதிய உயா்வு பொருந்தாது என்ற நிபந்தனைக்கு தளா்வளிக்கப்பட்டது.இதைத் தொடா்ந்து, உயா் கல்வித் தகுதி பெற்று பணிபுரிந்து வருபவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வகையில் 1997 முதல் 2000 ஆண்டுகளில், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான இடைநிலை ஆசிரியா் பின்னடைவுப் பணியிடங்களில் பணியமா்த்தப்பட்டு, தற்போது பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியா்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் அல்லது ஓய்வு பெற்றவா்களுக்கு மட்டும் எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.எட்., போன்ற முதுகலைப்பட்டம் ஆகியவற்றுக்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணையிடலாம். அவா்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கத் தடை ஏதுமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.