Breaking

Friday, July 10, 2020

மாணவர்களின் சுமையை குறைக்க சிபிஎஸ்இ போல் தமிழகத்திலும் 9 - 12 வகுப்பு வரை பாடங்களில் 30% குறைக்க திட்டம் : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு எனத் தகவல்
CLICK HERE TO READ MORE DETAILS தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை 30% பாடங்கள் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டன. இதனால் ஏற்பட்டுள்ள ஆசிரியர், மாணவர்களின் இடையேயான இடைவெளி, கற்றல் கற்பித்தலில் உள்ள குறைபாடுகள், பள்ளிகள் தாமதமாக திறப்பதால் பாடத் திட்டங்களை குறைக்கலாமா என்பது உள்பட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து கல்வித்துறைக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜிதாமஸ் வைத்தியன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் வரும் கல்வி ஆண்டில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் குறையும் என்பதால் சிபிஎஸ்இ போல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடங்களை 30% வரை குறைக்கலாம் என முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து முழுமையான அறிக்கையை தயார் செய்யப்பட்டு, அடுத்த வாரம் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. CLICK HERE TO READ MORE DETAILS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog