Breaking

Saturday, July 04, 2020

அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு அஞ்சலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செய்யூர் வட்டம் சூனாம்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், முன்னாள் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஆசிரியர் வீ.ஆறுமுகத்தின் 107ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சூ.க.ஆதவன் ஆகியோர் தலைமை வகித்தனர். பெற்றோர்-ஆசிரியர் கழக பொருளாளர் கோபுராஜ், முன்னாள் மாணவர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர் விடுதலை செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணி, சூனாம்பேடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அருள்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 107 மரக்கன்றுகளை நட்டனர். பின்னர், இப்பள்ளியில் கடந்த 1977ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுகள் வரை பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முடிவில் சித்தாமூர் வட்டார கல்வி அலுவலர் பழனிவேலன் நன்றி கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog