Breaking

Sunday, June 14, 2020

TNPSC தேர்வு தற்போதைக்கு இல்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பிறகே, போட்டி தேர்வுகளை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்படவில்லை. பள்ளி, கல்லுாரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில், பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தமிழக அரசின், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்த தேர்வுகளும், தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மத்திய அரசின், யு.பி.எஸ்.சி.,யின் புதிய போட்டி தேர்வுகள், மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி, டி.என்.பி.எஸ்.சி.,யும் தேர்வுகளை அறிவிக்குமா என, தேர்வர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், தற்போது தேர்வை நடத்தும் வாய்ப்பு இல்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை சரியானதும், ஒவ்வொரு தேர்வுக்கும் தேவையான இடைவெளி விட்டு, தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எனவே, புதிய அறிவிப்பு வரும் வரையிலும், தேர்வில் முன்னணி இடங்களை பெறும் வகையிலும், பயிற்சி பெறும் தேர்வர்களுக்கு, கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.
கொரோனா பாதிப்புள்ள நிலையில் தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாது.
சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். - டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார். தற்போதைய சூழலில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த வாய்ப்பில்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போதைய சூழலில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வாய்ப்பு இல்லை. சூழல் சரியானதும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடக்கும். தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாதம் அவகாசம் வழங்கப்படும். குரூப் 1, குரூப் 2 தேர்வுக்கு இடையே நிச்சயம் அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog