Breaking

Tuesday, May 19, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எஸ்..எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு 4-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில், பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதல்-அமைச்சர் ஆலோசனைபடியும், ஒப்புதலோடும் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை குறிப்பிட்ட காலத்தில் பொதுத்தேர்வு நடைபெறும்’ என்றார். இதையடுத்து அவர் சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக்கல்வி துறை செயலாளர், ஆணையர், இயக்குனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பொதுமுடக்கம் மே 31 வரை நீடிக்கப்பட்டதாலும், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததாலும் பத்தாம் வகுப்பு தேர்வுதேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்த அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியில் மாற்றமில்லை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிப்பு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog