Breaking

Friday, May 22, 2020

சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு, 'சீல்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரூரில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய, தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு படிக்கும் வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் மாணவர்களை வரவழைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு, புகார்கள் சென்றன.நேற்று காலை, 10:00 மணிக்கு, அரூரில் உள்ள, தனியார் பள்ளிக்கு சென்ற சப் - கலெக்டர் பிரதாப், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்ததை உறுதி செய்தார். அவரது உத்தரவுப்படி, பள்ளிக்கு வருவாய்த் துறையினர், 'சீல்' வைத்தனர். பிரதாப் கூறுகையில், ''அரசு உத்தரவுப்படி, தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக் கூடாது. ''மேலும், சில ஆசிரியர்கள், வீட்டில், 'டியூஷன்' நடத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளன. அவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog