Breaking

Tuesday, May 26, 2020

CBSE பொதுத்தேர்வு 15,000 மையங்களில் நடைபெறும். ரமேஷ் போக்ரியால்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் நடைபெற உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 15ஆயிரம் மையங்களில் நடைபெறும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்து உள்ளார். கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், சிபிஎஸ் உள்பட மாநில பாடத்தின்படி நடத்தப்படும் பொதுத்தேர்வுகள் மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள், உயர்படிப்புக்கான போட்டித்தேர்வுகள் உள்பட அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது 4வது கட்ட ஊரடங்கு மே 31ந்தேதி வரை உள்ள நிலையில், ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் தள்ளி வைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டணை வெளியிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நடைபெற உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என சமீபத்தில் அமைச்ர் ர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருந்தார். மேலும், தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்றும், தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், ஜூலை 1 - 15 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3,000 மையங்களுக்கு பதில் 15,000 மையங்களில் நடைபெறும் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog