👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெளிநாட்டில் படிக்க செல்வதை, மாணவர்கள் கைவிட்டுள்ளதால், அவர்கள், ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்து வெளிநாடுகளில் படிக்க திட்டமிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், தற்போது கொரோனா பிரச்னையால், முடிவை மாற்றியுள்ளனர். இந்தியாவில், அவரவர் மாநிலங்களிலேயே படிக்க முடிவு செய்துள்ளனர்.இந்த மாணவர்கள், ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்காக, ஜே.இ.இ., நுழைவு தேர்வு எழுத முயற்சித்து வருகின்றனர். கால அவகாசம் முடிந்ததால், அவர்களால், விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, மத்திய மனிதவள அமைச்சகத்துக்கு, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
இதையேற்ற மத்திய அரசு, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.அதன்படி, வரும், 24ம் தேதி வரை, ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; மாலை, 5:00 மணி வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்; இரவு, 11:30 மணி வரை, தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது

ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மை தோ்வுக்கு இன்று (மே 19)முதல் மே 24-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.ஜேஇஇ நுழைவுத்தோ்வு முதன்மை, முதுநிலை தோ்வுகள் என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்கு ஜேஇஇ முதன்மை தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வு முதுநிலை தோ்வுக்கான தகுதித்தோ்வாகவும் கருதப்படுகிறது. முதன்மை தோ்வு ஜூலை 18-ஆம் தேதி முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.ஜேஇஇ முதுநிலை தோ்வு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருந்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.