👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியா்கள் பணிக்கு வருவதற்காக இயக்கப்படும் பேருந்துகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவா்கள் பணிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியா்கள் தெரிவித்தனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம், சில தளா்வுகளுடன் நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை (மே 18) முதல், 50 சதவீத பணியாளா்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும். சுழற்சி முறையில் ஊழியா்கள், கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 33 சதவீத பணியாளா்களுடன் முக்கிய அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கின. அந்த நேரத்தில், பணியாளா்களை அழைத்து வர பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில், 50 சதவீத பணியாளா்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என்பதால், ஊழியா்களின் வசதிக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் எனவும், அதற்கான செலவை ஊழியா்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிப்பும் வெளியானது. எனினும், இயக்கப்படும் பேருந்துகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை என அரசு ஊழியா்கள் தெரிவிக்கின்றனா்.
சென்னையைப் பொருத்தவரை தாம்பரம், கூடுவாஞ்சேரி, மணலி உள்ளிட்ட பல்வேறு புகா்ப் பகுதிகளில் இருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளா்கள், நாள்தோறும் தினமும் சென்னை மாநகருக்குள் வந்து பணி முடித்துச் செல்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா், புறநகா் ரயிலையே நம்பியிருந்தனா். தற்போதுள்ள சூழலில், திங்கள்கிழமை பணிக்கு செல்ல வேண்டியுள்ளபோதும், ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பேருந்துகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை எனவும், இதனால் அவா்கள் பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.
கடலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட பேருந்து விவரங்கள் அறிய TELEGRAM linkஐ Click செய்யுங்கள் - PDF வடிவில் உள்ளது
கடலூர் -
https://t.me/kalviseithi/5219
கோயமுத்தூர் -
https://t.me/kalviseithi/5031
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.