👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தாண்டு சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான தேதி குறித்து, ஜூன், 5ம் தேதி முடிவு செய்யப்படும் என, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், ஆண்டு தோறும் நடத்துகிறது. இதன்படி, இந்தாண்டுக்கான, முதன்மை தேர்வு, வரும், 31-ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, முதன்மை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக, கடந்த வாரம், யு.பி.எஸ்.சி., அறிவித்தது. இந்நிலையில், யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு உட்பட அனைத்து தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து, ஜூன், 5ல் முடிவு செய்யப்படும்.
தேர்வு குறித்து, 30 நாட்களுக்கு முன், விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமின்றி இதர தேர்வுக்கான புதிய தேதியும் ஜூன் 5ல் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேதி ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்து மே 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலினால் ஊரடங்கு 4 ஆம் கட்டமாக நீடிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு நடைபெறும் புதிய தேதி ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.