👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு வைக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது. கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி ஆக்கப்படுவோர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பள்ளிகள் திறந்ததும் 9ம் வகுப்பு வரை தேர்வு வைக்க சில தனியார் பள்ளிகள் ரகசியமாக திட்டமிட்டுள்ளன. இதற்கான குறுஞ்செய்திகளை பெற்றோர்களுக்கு சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் அனுப்பி வவருகின்றன.
ஆனால் மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே பள்ளி ஆசிரியர்கள் நாளை பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ம் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு மே 26ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது என்று கல்வித்துறை கூறியுள்ளது.
பள்ளிகள் திறந்ததும் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தேர்வு
நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் தேர்ச்சி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.