Breaking

Monday, May 04, 2020

NEET/JEE தேர்வு தேதி நாளை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஜே.இ.இ., எனப்படும், பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி, நாளை அறிவிக்கப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாடு முழுதும், ஜே.இ.இ., எனப்படும் பொறியியல் படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன.இந்த தேர்வுகள், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டன.இந்நிலையில், ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், நாளை அறிவிப்பார். அதைத் தொடர்ந்து, மாணவர்களுடன், 'ஆன்லைன்' வாயிலாக அமைச்சர் உரையாட உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்
நீட், JEE தேர்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தேர்வுகள் நடத்துவதற்கான புதிய தேதிகள் மே 5-ல் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நீட் உள்ளிட்ட தேர்வு தேதிகள் மே. 5-தேதியன்று வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே.17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக 2020-21- ஆண்டுக்கான மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவு தேர்வுகளான நீட், ஜெ.இ.இ., தேர்வுகள் மே 3-ம் தேதி நடத்தப்பட இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. . இந்நிலையில் நீட், ஜெ.இ.இ., ஆகிய தேர்வுகளுக்கான தேதியை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வரும் மே.5-ம் தேதி அறிவிக்க உள்ளதாக , அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog