அதில் மேலும் 2 வாரங்களுக்கு சில பணிகளுக்கு அரசு தடை செய்துள்ளது. கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள்,
விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
பொது மக்களுக்கான விமான, இரயில், பொது பேருந்து போக்குவரத்து.
டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.
மெட்ரோ இரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து.
இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
திருமண நிகழ்ச்சிகள்
ஆகியவற்றுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குறிப்பிட்ட 11 செயல்பாடுகளுக்கு தடை தொடருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்ட தடை உத்தரவு அமலில் இருக்கும்.
வழிப்பாட்டுத் தலங்கள், திரையரங்குகள், மதுக்கூடங்கள், உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு கூடங்கள், அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் தங்கும் விடுதியை தவிர, தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது எனவும், திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.