👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்றைய இணைய யுகத்தில் சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து பணம் மோசடி செய்யும் கும்பல் அதிக அளவில் இருக்கின்றன. காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டாலும் புதிது புதிதாக கிளம்பி விடுகின்றனர்.
அந்த வகையில் 'செர்பெரஸ்' என்ற ஸ்மார்ட் போன் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாநில காவல்துறையினருக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளது.கணினி ஹேக்கர்கள் முதலில் கொரோனா தகவல்கள் குறித்த குறுந்தகவலை ஸ்மார்ட் போனுக்கு அனுப்புகின்றனர். அதில் உள்ள இணைப்பை 'கிளிக்' செய்தால் உடனே 'செர்பெரஸ்' வைரஸ் தன்னிச்சையாக ஸ்மார்ட்போனில் புகுந்து வங்கி கணக்கு 'கிரெடிட் கார்டு' உள்ளிட்ட தகவல்களை திருடி விடும். வங்கி சாப்ட்வேர் போல இரு முறை அங்கீகரிக்கும் அம்சங்களுடன் வருவதால் பலர் ஏமாந்து விடுகின்றனர். அதனால் குறுந்தகவலில் வரும் எந்த இணைப்பையும் 'கிளிக்' செய்ய வேண்டாம் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.